ஐபிஎல்

சஞ்சு சாம்சனை தோனியுடன் ஒப்பிடவேண்டாம்: கெளதம் கம்பீர்

இளம் வீரர் சஞ்சு சாம்சனை தோனியுடன் ஒப்பிட வேண்டாம் என முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.

DIN


இளம் வீரர் சஞ்சு சாம்சனை தோனியுடன் ஒப்பிட வேண்டாம் என முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.

ஷார்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப், 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 19.3 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் 42 பந்துகளில் 4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 85 ரன்கள் எடுத்தர் சஞ்சு சாம்சன். 

சஞ்சு சாம்சனின் 14 வயதில் அவரிடம் நான் சொன்னேன், அடுத்த தோனியாக நீ இருப்பாய் என. இரு அற்புதமான இன்னிங்ஸுக்குப் பிறகு உலகத் தரமான வீரராக உள்ளார் என்றார் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்.

இந்நிலையில் சஞ்சு சாம்சனைப் பலரும் தோனியுடன் ஒப்பிடுவதால் ட்விட்டரில் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியதாவது:

யாருக்கு அடுத்ததாகவும் சஞ்சு சாம்சன் இருக்க வேண்டியதில்லை. இந்திய கிரிக்கெட்டின் சஞ்சு சாம்சனாக அவர் இருப்பார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT