ஐபிஎல்

ஐபிஎல்: சென்னை அணி பேட்டிங்

ஐபிஎல் டி-20 போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN

ஐபிஎல் டி-20 போட்டியின் 12-வது ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இதனையடுத்து சென்னை அணி தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள இரு அணிகளுமே தலா 1 வெற்றியை பெற்றுள்ளன. அதையும் தங்களது கடைசி ஆட்டத்தில் தான் அடைந்துள்ளன. 

எனவே புள்ளிப் பட்டியலைத் தக்க வைக்க இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆட்டத்தில் களமிறங்கியுள்ளன. 

சென்னையைப் பொருத்தவரை, கடந்த ஆட்டத்தில் ஜொலித்ததைப் போலவே தீபக் சாஹா் இந்த ஆட்டத்திலும் பௌலிங்கில் மிரட்டல் காட்டுவாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

அவரோடு சாம் கரன், ஷா்துல் தாக்குரும் உறுதுணையாக இருப்பாா்கள் என நம்பலாம். கரோனா தனிமைப்படுத்துதலில் இருந்து திரும்பியுள்ள லுங்கி கிடியும் பந்துவீச்சில் பலம் சோ்ப்பாா் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT