ஐபிஎல்

சிஎஸ்கே ருதுராஜ் கெயிக்வாட்: பவர்பிளேயில் தடுமாற்றம், நடு ஓவர்களில் அதிரடி ஆட்டம்!

நடு ஓவர்களில் அப்படியே விஸ்வரூபம்...

DIN

சிஎஸ்கே தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட், இந்த வருட ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி முதலிடத்தில் இருப்பதற்கு ருதுராஜின் பேட்டிங்கும் முக்கியக் காரணம்.

இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 192 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 129.72.

எனினும் பவர்பிளே பகுதியான முதல் 6 ஓவர்களில் மிகக்குறைவாகவே ரன்கள் எடுத்து வருகிறார் ருதுராஜ். பவர்பிளேயில் அவருடைய ஸ்டிரைக் ரேட் - 91.11 ஆக உள்ளது. ஐபிஎல் 2021-ல் பவர்பிளேயில் விளையாடிய வீரர்களில் (குறைந்தது 30 பந்துகள்) இவர்தான் குறைந்த ஸ்டிரைக் ரேட்டைக் கொண்டுள்ளார். 

ஆனால் நடு ஓவர்களில் அப்படியே விஸ்வரூபம். குறைந்தது 30 பந்துகளை எதிர்கொண்ட வீரர்களில் 189.65 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார் ருதுராஜ். வேறு எந்த வீரரும் ருதுராஜ் அளவுக்கு இவ்வளவு விரைவாக ரன்கள் குவிப்பதில்லை.

ஆரம்ப ஓவர்களில் டுபிளெசிஸ்ஸும் இறுதி ஓவர்களில் ஜடேஜா, சாம் கரண், தோனி என அதிரடியாக விளையாட பலர் உள்ளார்கள். நடு ஓவர்களில் வேகமாக ரன்கள் எடுக்க ருதுராஜும் மொயீன் அலியும் சிஎஸ்கே அணிக்குப் பெரிய பலமாக உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT