ஐபிஎல்

ராஜஸ்தான் திணறல் பேட்டிங்: மும்பைக்கு 91 ரன்கள் இலக்கு

DIN


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

எவின் லீவிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வழக்கம்போல் அதிரடியாகவே இன்னிங்ஸைத் தொடங்கினர். முதலிரண்டு ஓவர்களில் 2 ஓவர்களில் இந்த இணை 21 ரன்கள் சேர்த்தது.

நாதன் கூல்டர் நைல் 4-வது ஓவரில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதற்குப் பலனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பவர் பிளேவின் கடைசி ஓவரில் லீவிஸ் (24 ரன்கள்) விக்கெட்டை ஜாஸ்பிரித் பும்ரா வீசினார்.

அணியில் புதிதாக சேர்க்கப்பட்ட ஜேம்ஸ் நீஷம் முதல் பந்திலேயே கேப்டன் சஞ்சு சாம்சன் (3) விக்கெட்டைக் கைப்பற்றினார். தனது அடுத்த ஓவரில் ஷிவம் துபே (3) விக்கெட்டையும் வீழ்த்தினார் நீஷம்.

இந்த சரிவிலிருந்து மீள்வதற்குள் கிளென் பிலிப்ஸ், ராகுல் தெவாட்டியா, ஷ்ரேயஸ் கோபால், சேதன் சகாரியா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். கடைசியில் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லரும் கூல்டர் நைல் பந்தில்15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

முஸ்தபிஸூர் ரஹ்மான் கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து ஆறுதல் அளித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை தரப்பில் கூல்டர் நைல் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளையும், ஜாஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT