கோப்புப்படம் 
ஐபிஎல்

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு: டெல்லியில் ஸ்டாய்னிஸ் உள்ளே!

குவாலிஃபையர் 2-வில் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN


குவாலிஃபையர் 2-வில் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (புதன்கிழமை) விளையாடுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களுடன் இந்த ஆட்டத்திலும் களமிறங்குகிறது கொல்கத்தா.

டெல்லி கேபிடல்ஸில் டாம் கரனுக்குப் பதில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். கூடுதல் பேட்டர் வேண்டும் என்பதால், ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளதாக கேப்டன் ரிஷப் பந்த் கூறினார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்ளும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT