ஐபிஎல்

கேட்சை நழுவவிட்ட தோனி: வெங்கடேஷ் ஐயர் அதிரடி அரைசதம்

கேட்சை நழுவவிட்ட தோனி: சென்னையை மிரட்டி வரும் கொல்கத்தா கொல்கத்தா அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

DIN

கேட்சை நழுவவிட்ட தோனி: சென்னையை மிரட்டி வரும் கொல்கத்தா கொல்கத்தா அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி துபையில் இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துக்கின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ், டூபிளெஸிஸ் ஆகியோர் களமிறங்கினர். 

ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி பின்னர் அதிரடியில் இறங்கியது. இருப்பினும், ருதுராஜ் 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ராபின் உத்தப்பா டூபிளெஸியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆரம்ப முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் சென்னை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூபிளெஸிஸ் சிக்ஸர் அடித்து அரைசதம் கடந்தார். 

ராபின் உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து மொயின் அலி களம் கண்டார். அவரும் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. அரைசதம் கடந்த டூபிளெஸிஸ் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர், 59 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்தார். 

கொல்கத்தா அணியில் சுனில் நரேன் 2, ஷிவம் மவி 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டது.

அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து ராணா களமிறங்கினார். ஆனால் அவர் வந்த வேகத்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இதனால் கொல்கத்தா அணி 11 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஷுப்மன் கில் 40, சுனில் நரேன் 0 ஆகியோர் களத்தில் உள்ளனர். 

முன்னதாக ஹேசல்வுட் வீசிய 2ஆவது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் கொடுத்த கேட்சை கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி தவறவிட்டார் என்பது குறிப்படத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT