கோப்புப்படம் 
ஐபிஎல்

10 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்த கொல்கத்தா: பெங்களூரு படுதோல்வி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

DIN


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு 19 ஓவர்கள் முடிவில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இந்த இணை தொடக்கம் முதலே துரித ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. இதனால், பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு கேப்டன் விராட் கோலி பந்துவீச்சாளர்களை மாற்றியும் பலன் தரவில்லை.

வெற்றியை நெருங்கியபோது 48 ரன்கள் எடுத்திருந்த கில் யுஸ்வேந்திர சஹால் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால், அதே ஓவரில் வெங்கடேஷ் மூன்று பவுண்டரிகளை விளாச கொல்கத்தா அணி வெற்றி இலக்கை அடைந்தது.

10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்த கொல்கத்தா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வெங்கடேஷ் 41 ரன்கள் எடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT