ஐபிஎல்

டெல்லி மிரட்டல் பந்துவீச்சு: 134 ரன்களுக்குக் கட்டுப்பட்டது ஹைதராபாத்

DIN


டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ரித்திமான் சாஹா களமிறங்கினர். ஆனால், அன்ரிச் நோர்க்கிய வீசிய முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் வார்னர் ஆட்டமிழந்தார்.

இதனால், தொடக்கம் முதலே ரன் வேகம் மந்தமாக இருந்தது. 18 ரன்கள் எடுத்த சாஹா, ககிசோ ரபாடாவின் வேகத்தில் வீழ்ந்தார். பவர் பிளே முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 32 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதன்பிறகு, நடு ஓவர்களில் வரிசையாக விக்கெட்டுகள் விழத் தொடங்கின. வில்லியம்சன் 226 பந்துகளில் 18 ரன்களுக்கும், மணீஷ் பாண்டே 17 ரன்களுக்கும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய கேதார் ஜாதவ் 3 ரன்களுக்கும், ஜேசன் ஹோல்டர் 10 ரன்களுக்கும் சோபிக்கத் தவறினர்.

கடைசி கட்டத்தில் அப்துல் சமத்தும், ரஷித் கானும் ஓரளவு அதிரடி காட்டி ரன்களை உயர்த்தினர். எனினும், அவர்களால் கடைசி வரை தாக்குப்பிடிக்க முடியவில்லை. சமத் 21 பந்துகளஇல் 28 ரன்களுக்கும் ரஷித் 19 பந்துகளில் 22 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.

டெல்லி தரப்பில் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளும், அன்ரிச் நோர்க்கியா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT