சிஎஸ்கேவுக்காகக் கண்ணீர் சிந்திய சிறுமிக்கு தோனி அளித்த பரிசு
சிஎஸ்கே ஆதரவாளரான சிறுமி ஒருவர், சிஎஸ்கேவின் வெற்றியை எண்ணி...
தில்லி அணிக்கு எதிரான பிளேஆஃப் ஆட்டத்தை வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்காகக் கண்ணீர் சிந்திய சிறுமிக்கு கிரிக்கெட் பந்தைப் பரிசாக வழங்கினார் தோனி.
துபையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய தில்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பிருத்வி ஷா 60 ரன்களும் ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 51 ரன்களும் ஹெட்மையர் 37 ரன்களும் எடுத்தார்கள். ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிறகு பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி பரபரப்பான முறையில் இலக்கை விரட்டி 9-வது முறையாக ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. சிஎஸ்கே 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ருதுராஜ் 70, உத்தப்பா 63 ரன்கள் எடுத்தார்கள். கடைசிக்கட்டத்தில் ஜடேஜாவுக்கு முன்பு களமிறங்கிய தோனி 6 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு மறக்க முடியாத வெற்றியை அளித்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த சிஎஸ்கே ஆதரவாளரான சிறுமி ஒருவர், சிஎஸ்கேவின் வெற்றியை எண்ணி தாங்கமுடியாமல் அவர் அழுதார். மைதானத்தில் இருந்த பெரிய திரையில் இந்தக் காட்சியை தோனி பார்த்திருந்ததால் வீரர்களுடன் நேரத்தைச் செலவிட்ட தருணத்திலும் மறக்காமல் ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கிரிக்கெட் பந்தை அந்தச் சிறுமிக்கு வழங்கினார். தோனியிடமிருந்து பரிசு கிடைத்ததால் அந்தச் சிறுமி மிகவும் ஆச்சர்யப்பட்டு உற்சாகமாகக் குதித்தார். இதன் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.