ஐபிஎல்

ஆர்சிபி அணி புதிதாகத் தேர்வு செய்த வீரர்

ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்சிபி அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது.

DIN

ஆர்சிபி அணியைச் சேர்ந்த லவ்நித் சிசோடியா காயம் காரணமாக விலகியதையடுத்து புதிய வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்சிபி அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த 22 வயது லவ்நித் சிசோடியாவை ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மாற்று விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. சிசோடியா 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் இதுவரை அறிமுகமாகவில்லை. இந்நிலையில் காயம் காரணமாக லவ்நித் சிசோடியா ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து ரஜத் படிதார் ஆர்சிபி அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரஜத் படிதார், மத்தியப் பிரதேச அணிக்காக 31 டி20 ஆட்டங்களில் விளையாடி 7 அரை சதங்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு ஆர்சிபி அணியில் நான்கு வருடங்கள் இடம்பெற்றுள்ளார். இப்போது ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT