ஐபிஎல்

சிஎஸ்கேவின் முதல் ஆட்டத்தில் மொயீன் அலி விளையாட மாட்டார்: அறிவிப்பு

பிரபல வீரர் மொயீன் அலி, ஐபிஎல் 2022 போட்டியின் முதல் ஆட்டத்தில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

சிஎஸ்கேவின் பிரபல வீரர் மொயீன் அலி, ஐபிஎல் 2022 போட்டியின் முதல் ஆட்டத்தில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 2022 போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மும்பை, புணேவில் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. 

மார்ச் 26 அன்று சென்னை சூப்பர் கிங்ஸும் கொல்கத்தா நைட்ரைடர்ஸும் மும்பையில் மோதுகின்றன. இந்நிலையில் இந்தியாவுக்கு இன்னும் வராத காரணத்தால் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர் மொயீன் அலி, முதல் ஆட்டத்தில் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: 

மொயீன் அலி இன்னும் விசா வாங்கவில்லை. பிசிசிஐயுடன் இதுதொடர்பாகப் பேசி வருகிறோம். பிசிசிஐயும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் விசா பணிகள் முடிந்துவிடும். இதுதான் தற்போதைய நிலை. இன்று விசா தொடர்பான பணிகள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். மொயீன் அலி எத்தனை ஆட்டங்களைத் தவறவிடுவார் என்பது அவர் வந்த பிறகு தான் தெரியும். தற்போதைக்கு அவர் முதல் ஆட்டத்தில் விளையாட மாட்டார். அவர் நாளைக்கு வந்தாலும் முதல் ஆட்டத்தில் அவரால் விளையாட முடியாது. அவர் கிளம்புவதற்குத் தயாராக உள்ளார். விசா கிடைத்தவுடன் அடுத்த விமானத்தில் இந்தியாவுக்கு வந்துவிடுவார் என்றார்.

சிஎஸ்கே அணி தனது 2-வது ஆட்டத்தில் மார்ச் 31 அன்று லக்னெள அணியை எதிர்கொள்கிறது. மும்பைக்கு மொயீன் அலி வந்த பிறகு மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார். இதனால் அடுத்த சில நாள்களில் மொயீன் அலியால் வரமுடியாமல் போனால் சிஎஸ்கேவின் 2-வது ஆட்டத்தையும் அவர் தவறவிட வேண்டியிருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT