ஐபிஎல்

குல்தீப்புக்குத் தேவை இவ்ளோதான்: ரிக்கி பாண்டிங்

குல்தீப் யாதவுக்கு அன்பும், கவனமும் நிறைந்த நேர்மறையான சூழல்தான் தேவை என டெல்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

DIN


குல்தீப் யாதவுக்கு அன்பும், கவனமும் நிறைந்த நேர்மறையான சூழல்தான் தேவை என டெல்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஐபிஎல் சீசனாகவே குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட முடியாமல் திணறி வந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்த அவரால் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் இருந்ததால் விளையாடும் லெவனில் இடம்பெற முடியவில்லை. பிறகு, முழங்காலில் காயம் ஏற்பட்டதையடுத்து, கடந்த ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார்.

ஆனால், இதே குல்தீப் யாதவை டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது. அவர் மீது டெல்லி கேபிடல்ஸ் அணி வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. நடப்பு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் 17 விக்கெட்டுன் இரண்டாம் இடத்தில் உள்ளார் குல்தீப் யாதவ்.

அவரைப் பற்றி டெல்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

"ஏலத்தில் அவர் எங்களது முக்கியமான வீரராக இருந்தார். அவருக்கு நாங்கள் நிறைய அன்பையும், கவனத்தையும் கொடுக்கிறோம். அவர் ஒரு அற்புதமான இளம் வீரர். குல்தீப் யாதவ் நேர்மறையான இந்த சூழலில் மேம்பட்டு வருகிறார்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவு நனவானது!

சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

"விக்' நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

SCROLL FOR NEXT