ஐபிஎல்

சென்னைக்காக 200-வது ஆட்டம்: தோனி புதிய மைல்கல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200-வது முறையாக மகேந்திர சிங் தோனி இன்று (புதன்கிழமை) களமிறங்கினார்.

DIN


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200-வது முறையாக மகேந்திர சிங் தோனி இன்று (புதன்கிழமை) களமிறங்கினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி களமிறங்கும் 200-வது ஆட்டம். கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பை பெற்றுத் தந்துள்ளார் தோனி. இதுதவிர 2010 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் கோப்பையும் ஜெயித்துக் கொடுத்துள்ளார் தோனி.

நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி பேட்டிங் சராசரி 35 உடன் 140 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை மொத்தம் 229 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், பேட்டிங் சராசரி 39.40 உடன் 4,886 ரன்கள் குவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

SCROLL FOR NEXT