ஐபிஎல்

விமர்சனங்களுக்கு பதிலடி: ராஷித்கான்

DIN

மும்பை : மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக குஜராத் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் ரஷித் கான் தன் மீதான விமர்சனங்களுக்கு பந்து வீச்சால் பதிலளித்துள்ளார்.

குஜராத் அணிக்கு விளையாடி வரும் ரஷித் கான் சிறப்பாக பேட்டிங் செய்து வந்தாலும் பந்து வீச்சில் தனது சக அணி வீரர்கள் போல் விக்கெட் எடுப்பதில்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் பொலார்ட் விக்கெட்டை வீழ்த்தினார். குறிப்பாக அதிரடி மன்னன் பொலார்ட் இவரது பந்து வீச்சில் மிகவும் தடுமாறினார். இந்த முக்கியமான விக்கெட்டை எடுத்ததால்தான் மும்பை 177 ரன்களுக்கு சுருண்டது. நான்கு ஓவரில் 24 ரன்களை மட்டுமே வழங்கி 2 விக்கெட்டை வீழ்த்தினார் ரஷித் கான். 

"டி20யில் விக்கெட் எடுப்பது சிறப்பானது என்றாலும் என்னைப் பொறுத்தவரை குறைவான ரன்களை தருவதே முக்கியமானது. ஏன் எனில் ஒருபக்கம் குறைவான ரன்கள் கொடுக்கும்போது மறுபக்கம் விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்பு அதிகம். கடந்த ஆண்டு கூட 13-14 விக்கெட்டுகள் தான் எடுத்தேன். இந்தாண்டும் 11 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறேன் ஆனால் எகானமி குறைவாகவே உள்ளது. டி20யைப் பொறுத்தவரை தினமும் கற்றுக்கொள்வது தானே" என்று போட்டி முடிந்த பிறகு ரஷித் கான் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT