ஐபிஎல்

முக்கியமான நேரத்தில் நன்றாக விளையாடுவது மகிழ்ச்சி தருகிறது: ஷர்துல் தாக்குர்

மும்பை : ஐபிஎல் தொடரின் 64வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வீரர் ஷர்துல் தாக்குர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

DIN

மும்பை : ஐபிஎல் தொடரின் 64வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் ஷர்துல் தாக்குர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

மும்பை டி ஒய் பாட்டில் ஆடுகளத்தில் தில்லி பஞ்சாப்பை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. இதில் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் எடுத்த  ஷர்துல் தாக்குர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

“சரியான நேரத்தில் நான் நன்றாக விளையாடுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக கடைசி இரண்டு போட்டிகளில் நான் நன்றாக விளையாடுவது அணிக்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. 6வது ஓவரில் நான் எடுத்த 2 விக்கெட்டுகள் மூலமாக எதிரணி நிலைக்குழைந்தது. பவர் ப்ளேவில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமான ரன்களை லீக் செய்தாலும் பவர் ப்ளே முடிந்ததும் ரன்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. ஸ்பின்னர்கள் அவர்களுடைய வேலையை நன்றாக செய்தனர். 12வது ஓவருக்கு பிறகு ஈரப்பதம் காரணமாக குல்தீப்க்கு பந்து வீச வாய்ப்பு கொடுக்கவில்லை. நான் நன்றாக பயிற்சி எடுத்து வருகிறேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரன்கள் அடிக்கப் பார்க்கிறேன். இன்னும் அதிக ரன்கள் அடிபேன் என்று நம்பிக்கையுள்ளது” என்று ஷர்துல் தாக்குர் பேட்டியளித்தார்.

பஞ்சாப்பை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி முக்கியமான நேரத்தில் வெற்றியைப் பெற்ற தில்லி அணி இதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

2,900 இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

SCROLL FOR NEXT