ஐபிஎல்

தில்லி கேபிடல்ஸ் அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேற்றம்

மும்பை: ஐபிஎல் தொடரின் 64வது லீக் போட்டியில் தில்லி பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. 

DIN

மும்பை: ஐபிஎல் தொடரின் 64வது லீக் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. 

முதலில் ஆடிய தில்லி அணியின் தொடக்க வீரர் வார்னர் லிவிங்ஸ்ல்டன் வீசிய முதல் பந்திலே அவுட் ஆனார். அடுத்து சமாளித்து ஆடிய தில்லி அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. 

அடுத்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 44, பேர்ஸ்டோ 28, ராகுல் சஹார் 25 ரன்களும் எடுத்தனர். மொத்தமாக 20 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்தது. தில்லி அணியில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளும், அக்‌ஷர் மற்றும் குல்திப் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

17 ரன்கள் விதியாசத்தில் தில்லி அணி வெற்றிப் பெற்றது. இதன் மூலமாக புள்ளி பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்தது. பஞ்சாப் 7வது இடதுக்கு சரிந்தது. 

இதன் மூலமாக பஞ்சாப் அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு கடுமையாக பாதித்துள்ளது. அடுத்து வரும் ஆட்டத்தில் இமாலய வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல முடியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

2,900 யூனிட் இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

SCROLL FOR NEXT