லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவின் பந்துவீச்சை கவனமாக எதிர்கொள்ள வேண்டுமென குஜராத் டைட்டன்ஸ் அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
லக்னௌ அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான மயங்க் யாதவ், நடப்பு ஐபிஎல் தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரது பந்துவீச்சில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்பட பலரும் ரன்கள் குவிக்கத் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவின் பந்துவீச்சை கவனமாக எதிர்கொள்ள வேண்டுமென குஜராத் டைட்டன்ஸ் அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மயங்க் யாதவ் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். அவருக்கு எதிராக எப்படி விளையாடப் போகிறோம் என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவரது பந்துவீச்சை அடித்து அதிரடியாக விளையாட முடியுமென்றால், அடித்து விளையாடுங்கள். அவர் அதற்கும் மேலாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினால், அவரது ஓவரில் ரன்கள் பெரிதாக குவிக்க முயற்சிக்காமல் கவனமாக கடந்து செல்வது நல்லது. மற்ற பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ரன்கள் குவித்துக் கொள்ளலாம் என்றார்.
இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னௌ அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.