PTI
PTI
ஐபிஎல்

மோசமான பந்துவீச்சு: விரக்தியில் பேசிய ஆர்சிபி கேப்டன்!

DIN

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இது குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிலெஸ்ஸி பேசியதாவது:

டாஸ், ஈரப்பதம் போன்ற விசயங்கள் மிகவும் பாதித்தது. பவர்பிளேவில் நாங்கள் அதிகமாக தவறுகளை செய்டுவிட்டோம். ஈரப்பதம் ஒரு காரணியாக இருக்குமென தெரியும். 250க்கும் அதிகமாக அடித்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். 196 என்பது மிகவும் குறைவு என அவர்கள் காட்டிவிட்டார்கள்.

நானும் படிதாரும் ஆட்டமிழந்தபோது ரன்கள் குறைந்தது. பும்ரா மாதிரி இருவர் எங்கள் அணியில் இருக்க வேண்டும். அழுத்தமான நேரங்களில் சிறப்பாக பந்து வீசுகிறார். இனிமேல் நாங்கள் அதிகமாக ரன்களை அடிக்க முயற்சிக்க வேண்டும்; ஏனெனில் எங்களது பௌலர்கள் எங்களது பலமில்லை என்பது தெரியும். முதல் 4-5 ஓவர்களில் அதிகமாக ரன்களை குவிக்க வேண்டும் எனக் கூறினார்.

புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது ஆர்சிபி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

மாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: போதையில் இருந்த ஓட்டுநா் கைது

ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு

கோவை -மங்களூரு இடையே சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT