ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் படம் | ஐபிஎல்
ஐபிஎல்

தில்லி அணிக்காக அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்!

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக இளம் வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

DIN

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக இளம் வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய தில்லி அணியின் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் அதிரடியாக அரைசதம் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் அதிரடியாக 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

கௌதம் கம்பீர் - 58* ரன்கள் - ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக, 2008

ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் - 55 ரன்கள் - லக்னௌவுக்கு எதிராக, 2024

சாம் பில்லிங்ஸ் - 54 ரன்கள் - கொல்கத்தாவுக்கு எதிராக, 2016

பால் காலிங்வுட் - 53 ரன்கள் - கொல்கத்தாவுக்கு எதிராக, 2010

ஷிகர் தவான் - 52* ரன்கள் - ராஜஸ்தானுக்கு எதிராக, 2008

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாப்பி ராஜ் புரோமோ!

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

SCROLL FOR NEXT