படம் | ஐபிஎல்
ஐபிஎல்

பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்; ஷிகர் தவான் அணியில் இல்லை!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நடைபெறும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட் செய்கிறது.

ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று விளையாடவில்லை. அவர்களுக்குப் பதிலாக ரோவ்மன் மற்றும் தனுஷ் கோட்டியான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் கேப்டன் ஷிகர் தவான் இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. பஞ்சாப் கிங்ஸை சாம் கரண் கேப்டனாக வழிநடத்துகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

10 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா்கள் கைது

பள்ளி மாணவா் கொலை வழக்கு: சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை

ராயல் கோ் மருத்துவமனைக்கு விருது

SCROLL FOR NEXT