ஐபிஎல்

இது 2-ஆவது முறை: ரன் அடிக்காமலே ஜெயித்த ஆவேஷ் கான்!

ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லரை விடவும் ஆவேஷ் கான் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

DIN

ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் சோ்த்து வென்றது.

9வது விக்கெட்டாக 17.4ஆவது ஓவரில் களமிறங்கினார் ஆவேஷ் கான். ஒரு பந்து கூட விளையாடாமல் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

2023இல் லக்னௌ அணியில் இது மாதிரி ஒரு முறை கடைசி பந்தில் ரன் அடிக்காமல் பைஸில் வெற்றி பெற்றார். அதன் வெற்றியை ஆக்ரோஷமான விதத்தில் ஹெல்மெட்டை கீழேப்போட்டு கொண்டாடினார். இது அப்போதே வைரலானது. தற்போது இரண்டாவது முறையாக ஒரு ரன்னும் அடிக்காமல் வெற்றிக்கு உதவியுள்ளார்.

இதனால் ராஜஸ்தான் அணியினர் ஆவேஷ் கானை ஃபினிஷர் என பாராட்டி விடியோ வெளியிட்டுள்ளார்கள். லக்னௌ அணியும் பாராட்டி ஜாலியாக பதிவிட்டுள்ளது. இணையத்தில் ரசிகர்களும் ஆவேஷ் கானை புகழ்ந்து வருகிறார்கள்.

ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லரை விடவும் ஆவேஷ் கான் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!

பாஜகவிலிருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் தலைவர்!

ஜிஎஸ்டி குறைப்பு: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலையில் மாற்றம்!

ஓடிடியில் கவனம் பெறும் பன் பட்டர் ஜாம்!

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT