எம்.எஸ்.தோனி படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

DIN

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 78 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 150 வெற்றிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 133 வெற்றிகளுடன் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 2-வது இடத்தில் உள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் அதிக வெற்றிகள் பெற்ற வீரர்கள்

எம்.எஸ்.தோனி - 150 வெற்றிகள்

ரவீந்திர ஜடேஜா - 133 வெற்றிகள்

ரோஹித் சர்மா - 133 வெற்றிகள்

தினேஷ் கார்த்திக் - 125 வெற்றிகள்

சுரேஷ் ரெய்னா - 125 வெற்றிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT