ரிஷப் பந்த் படம் | AP
ஐபிஎல்

முதல் முறையாக பேட்டிங் செய்த அனுபவத்தைப் பகிர்ந்த ரிஷப் பந்த்!

கார் விபத்துக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து ரிஷப் பந்த் மனம் திறந்துள்ளார்.

DIN

பேட்டிங் செய்யும்போது பதற்றமாக உணர்ந்ததாகவும், முதல் போட்டியில் விளையாடிய விதம் திருப்தியளிப்பதாகவும் தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

கார் விபத்திலிருந்து குணமடைந்துள்ள ரிஷப் பந்த் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அவர் 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு ரிஷப் பந்த் பேசியதாவது: மைதானத்தில் பேட்டிங் செய்ய நுழைந்தபோது நான் சிறிது பதற்றமாக உணர்ந்தேன். நான் பதற்றமாக உணர்வது இது முதல்முறையல்ல. இந்தப் போட்டியில் நான் செயல்பட்ட விதம் எனக்கு திருப்தியளித்தது என்றார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

தேசிய விருதுகள்: புனைவு அல்லாத திரைப்பட விருதுகள்!

கூலி படத்திற்கு ’ஏ’ சான்றிதழ்!

தேசிய விருதுகள்: சிறந்த மலையாளப் படம் 'உள்ளொழுக்கு'; சிறந்த துணை நடிகை ஊர்வசி!

SCROLL FOR NEXT