ரிஷப் பந்த் படம் | AP
ஐபிஎல்

ரிஷப் பந்த்தின் ஃபார்ம் குறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர்!

ரிஷப் பந்த் ஃபார்முக்குத் திரும்புவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பேசியுள்ளார்.

DIN

ரிஷப் பந்த் ஃபார்முக்குத் திரும்புவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் 15 மாத இடைவெளிக்குப் பிறகு நேற்று (மார்ச் 23) முதல் முறையாக கிரிக்கெட் விளையாடினார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ரிஷப் பந்த் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், ஒரு கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் செய்தார்.

நவ்ஜோத் சிங் சித்து

இந்த நிலையில், ரிஷப் பந்த் ஒரு சில போட்டிகளில் ஃபார்முக்குத் திரும்புவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தில்லி கேப்பிடல்ஸ் அணியை பந்த் வழிநடத்தி வருகிறார். ரன்கள் எடுக்க அவர் நன்றாக ஓடுகிறார். அவர் சிறப்பாக விளையாடுகிறார். ஒரு சில போட்டிகளில் அவர் பழைய ஃபார்முக்குத் திரும்புவார். மிகச் சிறந்த வீரரான ரிஷப் பந்த் இந்திய அணிக்கு மீண்டும் கிடைத்துள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

SCROLL FOR NEXT