கோப்புப்படம் 
ஐபிஎல்

‘வெற்றி உன் மேல் கொண்ட காதல் புனிதமானது’: தோனிக்கு ஹர்பஜன் புகழாரம்

‘வெற்றி மகுடம் சூட காத்திருப்போர் மத்தியில் வெற்றியின் மகுடம் நீ’

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை புகழ்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை கோப்பைகளை பெற்றுத் தந்த தோனி, இந்த முறை இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிடன் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

இந்த முறை வெறும் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக களமிறங்கினாலும், தோனியின் பெயர்தான் மைதானத்தில் ஒலித்துக் கொண்டே உள்ளது.

ஐபிஎல் 2024 தொடரில் சென்னை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியை நேற்றைய போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரரும், சிஎஸ்கே வீரருமான ஹர்பஜன் சிங் எக்ஸ் தளத்தில் தோனியை புகழ்ந்து தமிழில் பதிவிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டு மக்களை "மஞ்சள் மேல்" பாய்சாக மாற்றிய எங்கள் தல தோனியே. வெற்றி உன் மேல் கொண்ட காதல் எதையும் தாண்டி புனிதமானது.வெற்றி மகுடம் சூட காத்திருப்போர் மத்தியில் வெற்றிக்கு மகுடமாக எப்போதும் நீ சிங்கம்தான். இம்முறையும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு வெற்றி முகமே”

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2018 முதல் 2020 வரை விளையாடிய ஹர்பஜன், அவ்வப்போது தமிழில் பதிவிட்டு வைரலாவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT