நம்பிக்கையூட்டிய சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் படங்கள்: இன்ஸ்டா / சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
ஐபிஎல்

சன்ரைசர்ஸ் ஹாட்ரிக் தோல்விக்கு நம்பிக்கையூட்டிய தலைமைப் பயிற்சியாளர்..! பதக்கங்கள் வழங்கல்!

சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பேசியதாவது...

DIN

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அதன் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பேசினார்.

முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 200 ரன்கள் குவிக்க சன்ரைசர்ஸ் அணி 120 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.

ஃபீல்டிங், பேட்டிங் என மோசமாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணிக்கு ஹாட்ரிக் தோல்வியினால் கடுமையான நாளாக இருந்திருக்கும்.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அதன் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பேசியிருக்கிறார்.

சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதில் வெட்டோரி பேசியதாவது:

உங்களுக்கென்று நேரத்தை ஒதுக்குங்கள்

அடுத்த போட்டிக்கு இன்னும் 48 மணி நேரம் இருக்கிறது. உங்களது ஆட்டதுக்கென்று சிறிது நேரத்தை ஒத்துக்குங்கள். அது மனநிலையாக அல்லது உடல்நிலை எதுவானாலும் உங்களுக்கென நேரத்தை ஒத்துக்குங்கள்.

அனைத்து முயற்சிகளையும் உங்களுக்குள்ளாக எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில் இந்தமாதிரியான நேரத்தில் உங்களுக்கு பல விஷயங்களில் திசை மாறும்.

இந்த அறையிலுள்ள ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விதத்தில் ஒரு சிறிய முன்னேற்றம் நடந்தாலும் அது அணியை பாதிக்கும். ஒரு நல்ல அணியாக இருப்பதால் இதைச் சொல்லுகிறேன்.

ஹாட்ரிக் தோல்வி அனைவரையும் பாதித்து இருக்கும். நாம் நல்ல அணியாக இருப்பதால் இதை மனதுக்குள் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

மற்றவர்களைக் குறித்து கவலை கொள்ளாதீர்கள்

இந்த அறையிலுள்ள ஒவ்வொருவரும் எப்படியான திறமைசாலிகள் என்பது தெரியும். நாம் நம்மை நம்ப வேண்டும். தொடர்ச்சியாக நம்பினால் நமது பாணி நமக்கு பயனளிக்கும்.

அதனால், வீரர்களே உங்களுக்கென்று நேரத்தை ஒதுக்குங்கள். மற்றவர்களைக் குறித்து கவலை கொள்ளாதீர்கள். உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள்.

எதாவது அறிவுரை வேண்டுமென்றால் நாங்கள் (பயிற்சியாளர்கள்) இருக்கிறோம்.

இன்று அறிமுகமாகி பேட்டிங், பௌலிங்கில் சிறப்பாக விளையாடிய கமிந்து மெண்டிஸுக்கு வாழ்த்துகள்.

சில கேட்ச்சுகள் சிறப்பாக பிடித்தீர்கள். இருப்பினும் பாட் கம்மின்ஸ் தடுத்த ஒரு ஃபீல்டிங்கினால் அடுத்த பந்து விக்கெட் விழுந்தது. அதனால் அவருக்கு சிறந்த பாதுகாவலர் என்ற விருது அளிக்கப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உணவுக்காக வந்த பாலஸ்தீனா்கள் கடத்தல்’

வெள்ளத்தில் சிக்கிய பஞ்சாப் கிராம மக்கள்: ராணுவத்தின் சிறப்பு வாகனங்களில் மீட்பு

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப். 3 முதல் விநியோகம்

யூகோ வங்கி நிகர லாபம் 10% அதிகரிப்பு

தொழிலக உற்பத்தியில் 4 மாதங்கள் காணாத உயா்வு

SCROLL FOR NEXT