மைக்கேல் ஹசி படம்: எக்ஸ்/ ஐபிஎல்
ஐபிஎல்

பேட்டர்களிடம் வித்தியாசமாக விளையாடுமாறு கூறமுடியாது: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

சிஎஸ்கே அணியின் பேட்டிங்கின் பயிற்சியாளர் ஹசி பேட்டியில் கூறியதாவது...

DIN

18-ஆவது ஐபிஎல் சீசனில் முதல் போட்டியைத் தவிர மீதம் விளையாடிய 5 போட்டிகளில் சிஸ்கே அணி தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் தோல்வியுற்று மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கேகேஆருக்கு எதிராக நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே 103/9 ரன்களை எடுக்க, கேகேஆர் அணி 10.1 ஓவரில் 107/2 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

சிஎஸ்கே அணியில் பேட்டிங் மிக மோசமாக இருக்கிறது. இது குறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறியதாவது:

நல்ல வீரர்கள் இருப்பதாகவே நம்புகிறேன்

எங்களிடம் நல்ல வீரர்கள் இருப்பதாகவே இப்போதும் நம்புகிறேன். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் தொடர்ச்சியாக நன்றாக விளையாடவும் உதவ முயல்கிறோம்.

பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எதுவானாலும் இப்போதைய நிலையிலிருந்துதான் அவர்களை சீராக்கி வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது.

நாங்கள் விளையாடும் முறை குறித்து அதிகமான விமர்சனங்களைப் பார்க்கிறேன்.

வித்தியாசமாக விளையாடுமாறு எதிர்பார்க்க முடியாது

எங்களிடம் இருக்கும் வீரர்களிடம் முற்றிலும் வித்தியாசமாக விளையாடுமாறு எதிர்பார்க்க முடியாது.

எங்களது வீரர்களுக்கு அவர்கள் விளையாடும் ஷாட்டுகள் இயல்பானது. அவர்களது பாணியில் நன்றாக விளையாட ஐபிஎல் வந்திருக்கிறார்கள்.

நான் அவர்களிடம் வித்தியாசமாக விளையாடுங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் அவர்களால் அவ்வளவுதான் விளையாட முடியும்.

ஃபார்மின் கடைசி கட்ட காலத்தில் சிஎஸ்கேவுக்கு வருபவர்கள்

வீரர்கள் தங்களது பிரைம் ஃபார்முக்கு பிறகு இங்கு வருகிறார்கள் என்பதை விமர்சிப்பேன். ஆனால், தங்களது ஃபார்மின் கடைசி கட்ட காலத்தில் சிஎஸ்கேவுக்கு வருபவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள்.

ஷேன் வாட்சன், அஜிங்க்யா ரஹானே சிஎஸ்கே அணிகாக நன்றாக விளையாடியுள்ளார்கள்.

எங்களிடம் இருக்கும் வீரர்களிடம் இன்னமும் சிறிது நல்ல கிரிக்கெட் இருக்கிறது. அவர்களால் அதைச் செய்ய முடியுமென நினைக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

9 மாநிலங்களுக்கு ரூ. 4,645.60 கோடி புனரமைப்புத் திட்ட நிதி - உயர்மட்டக் குழு ஒப்புதல்

SCROLL FOR NEXT