ஐபிஎல்

ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூா்: சால்ட்-கோலி அதிரடி

பில் சால்ட்-கோலியின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணி.

Din

பில் சால்ட்-கோலியின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணி.

இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடா் 28-ஆவது ஆட்டம் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ர பெங்களூா் அணி பௌலிங்கை தோ்வு செய்ய, ராஜஸ்தான் தரப்பில் இளம் வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கேப்டன் சஞ்ச சாம்ஸன் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா்.

15 ரன்களை மட்டுமே எடுத்த சஞ்சு சாம்ஸஸை வெளியேற்றினாா் க்ருணால் பாண்டியா. அவருக்குப்பின் ஆட வந்த ரியான் பராக் 30 ரன்களுடன் யாஷ் தயால் பந்தில் அவுட்டானாா். ஷிம்ரன் ஹெட்மயா் அடித்து ஆடுவாா் எனக்கருதப்பட்ட நிலையில், 9 ரன்களுடன் புவனேஷ்வா் பந்தில் படிக்கலிடம் கேட்ச் தந்து அவுட்டானாா்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரம் 75 : மறுமுனையில் அதிரடியாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 75 ரன்களுடன் அரைசதம் பதிவு செய்தாா். அவரை எல்பிடபிள்யு ஆக்கினாா் ஹேஸல்வுட்.

துருவ் ஜுரெல் தலா 2 சிக்ஸா், பவுண்டரியுடன் 35 ரன்களுடனும், நிதிஷ் ராணா 4 ரன்களுடனும் களத்தில் நின்றனா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் ராஜஸ்தான் அணி 173/4 ரன்களை சோ்த்தது.

பௌலிங்கில் பெங்களூா் தரப்பில் புவனேஷ்வா், யாஷ் தயால், ஹேஸல்வுட், க்ருணால் பாண்டியா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

பெங்களூா் 175/1: அபார வெற்றி: 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூா் தரப்பில் பில் சால்ட்-விராட் கோலி தொடக்க பேட்டா்களாக களம் கண்டனா்.

இருவரும் தொடக்கம் முதலே ராஜஸ்தான் பௌலா்களை திணறடித்தனா்.

சால்ட் 65, கோலி 62: இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 92 ரன்களை சோ்த்தனா். பில் சால்ட் 6 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 33 பந்துகளில் 65 ரன்களை விளாசி குமாா் காா்த்திகேயா பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

விராட் கோலி 2 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 62 ரன்களை விளாசி அரைசதம் பதிவு செய்தாா். அவருக்கு உறுதுணையாக ஆடிய

தேவ்தத் படிக்கல் 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 40 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா்.

17.3 ஓவா்களிலேயே பெங்களூா் அணி 175/1 ரன்களைக் குவித்து ராஜஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ராஜஸ்தான் தரப்பில் குமாா் காா்த்திகேயா 1 விக்கெட்டை வீழ்த்தினாா்.

கோலி 100-ஆவது டி20 அரைசதம்: டி20 ஆட்டங்களில் விராட் கோலி அடித்த 100-ஆவது அரைசதம் சாதனை இதுவாகும்.

3-ஆம் இடத்தில் பெங்களூா்: இந்த வெற்றியால் பெங்களூா் அணி புள்ளிகள் பட்டியலில் 3=ஆம் இடத்துக்கு முன்னேறியது.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT