தோனியுடன் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன்.  கோப்புப் படம்
ஐபிஎல்

சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து கவலையில்லை: காசி விஸ்வநாதன்

சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது...

DIN

சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் இந்தத் தோல்விகளுக்கும் எல்லாம் கவலைப்பட மாட்டோம் எனக் கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 8இல் 6 போட்டிகளில் தோல்வியுற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

சிஎஸ்கே அணியில் அதிரடியாக விளையாடும் வீரர் இல்லாததால் தடுமாறி வருகிறார்கள்.

ருதுராஜ் காயம் காரணமாக வெளியேற தோனி தலைமையேற்று சிஎஸ்கே அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியதாவது:

சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து கவலையில்லை

நாங்கள் இந்தமுறை சரியாக விளையாடவில்லை. நன்றாக விளையாட முயற்சிக்கிறோம். அடுத்த சில போட்டிகளில் நன்றாக விளையாடுவோம்.

இது வெறுமனே போட்டிதான். நாங்கள் இன்னும் அவசர நிலை பொத்தானை அழுத்தவில்லை. சிஎஸ்கே நிர்வாகம் அதுமாதிரியானதில்லை.

ஒரு அணியாக அனைவரும் நன்றாக விளையாட வேண்டும். தோனி தலைமை ஏற்றதும் எதுவும் மாறவில்லை என அவரை மட்டும் குறைசொல்ல முடியாது.

நாங்கள் சிஎஸ்கே அணியின் நிர்வாகத்திடம் பேசுவதில்லை. அணிக்கு எது நல்லதோ அதைதான் தோனி செய்வார்.

நிர்வாகத்தினராக நாங்கள் சிஎஸ்கே அணியின் நல்ல விளையாட்டை எதிர்பார்க்கிறோம். அணியை விமர்சிப்பதில்லை எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றும் தங்கம் விலை உயர்ந்ததா? விலை நிலவரம்!

தங்க அட்டை விசா கட்டணம் ரூ. 9 கோடி! டிரம்ப் அறிமுகம்!

சென்னை மெட்ரோ ரயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு

புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் ஆன்மிக சுற்றுலா திட்டம் தொடக்கம்!

தமிழர் வரலாறு குறித்த ஆழ்கடல் ஆராய்ச்சி தொடக்கம்!

SCROLL FOR NEXT