பாட் கம்மின்ஸ் 
ஐபிஎல்

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாட் கம்மின்ஸ் பேசியதென்ன?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு குறித்து அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

DIN

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு குறித்து அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

பாட் கம்மின்ஸ் கூறியதென்ன?

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் இன்று விளையாடவுள்ள நிலையில், எங்களது பேட்டர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் நன்றாக விளையாடினாலே போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமானதாக இருக்கும் என சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களது அணியில் உள்ள பேட்டர்கள் அனைவரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு விளையாடக் கூடியவர்கள். இந்த சீசனின் முதல் போட்டியிலேயே 280 ரன்களுக்கும் அதிகமாக குவித்தோம். எங்களது வீரர்கள் 200 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார்கள். எல்லா போட்டிகளிலும் பேட்டர்களால் சிறப்பாக செயல்பட முடியாது. ஆனால், எங்களது அணியில் உள்ள இரண்டு அல்லது மூன்று பேட்டர்கள் நன்றாக விளையாடினாலே எங்களால் போட்டியில் வெற்றி பெற்றுவிட முடியும்.

கடந்த சீசனில் எங்களது அதிரடியான பேட்டிங் குறித்து மட்டுமே அனைவரும் பேசினர். ஆனால், எங்களிடம் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சு வரிசையும் இருந்தது. அப்போது அணியில் புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், நடராஜன் போன்ற வீரர்கள் இருந்தார்கள். இந்த ஆண்டும் எங்களிடம் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். முகமது ஷமி, ஹர்ஷல் படேல் போன்ற அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்றார்.

சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து விளையாடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT