படம்: சிஎஸ்கே எக்ஸ்  
ஐபிஎல்

7-வது முறையாக ஃபேர் பிளே விருது வென்ற சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபேர் பிளே விருது வென்றது பற்றி...

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது முறையாக ஃபேர் பிளே (Fair Play) விருது வென்றுள்ளது.

ஐபிஎல் சீசன் 18 தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல்முறையாக கோப்பை வென்றுள்ளது.

இந்த நிலையில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 7-வது முறையாக ஃபேர் பிளே விருதை வென்றுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் சக அணியின் வீரர்களை மதிப்பது, நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது, வீரர்களின் ஒழுக்கம் உள்ளிட்டவை மதிப்பீடு செய்து ஒவ்வொரு போட்டிக்கும் அணிகளுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 14 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 143 புள்ளிகள் பெற்று, 10.21 சராசரியுடன் முதல் இடத்தில் நீடித்தது.

இதனடிப்படையில், நியாயமாக விளையாடிய அணி என்ற விருதை வென்றுள்ளது.

இதற்கு முன்னதாக 2008, 2010, 2011, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபேர் பிளே விருதை வென்றுள்ளது.

அதிக முறை ஃபேர் பிளே விருதை வென்ற அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிப்பட்ட சிப்பங்கள்: காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் சாதனை!

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் பெண் கல்விக்கு முக்கிய பங்கு: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு

டிஜிபி அலுவலகம் அருகே ‘ஏர்போர்ட்’ மூா்த்தி மீது விசிகவினர் சரமாரி தாக்குதல்!

சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!

SCROLL FOR NEXT