வைபவ் சூர்யவன்ஷி படம்: ஏபி
ஐபிஎல்

அடுத்த சீசனில் 2 மடங்கு நன்றாக விளையாடுவேன்: வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி கூறியதாவது...

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதான வைபவ் சூர்யன்ஷி இந்த சீசனில் முதல்முறையாக விளையாடினார். 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்துள்ள இவர் 206.6 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அசத்தினார்.

இந்தப் போட்டிகளில் அதிவேகம் சதம், அரைசதம் அடித்ததுள்ளார். ஐபிஎல் நிறைவு விழாவில் சூப்பர் ஸ்டிரைக்கர் விருது வென்றார். அதற்காக டாடா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை பரிசாகப் பெற்றார்.

இந்தியாவின் யு-19 அணியில் தொடக்க வீரராக இவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் பேசியதாக ஐபிஎல் நிர்வாகம் பகிர்ந்துள்ளதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐபிஎல் போட்டியில் விளையாடுவது அனைவருக்கும் ஒரு கனவு போன்றது. முதல் சீசனில் அதிகமான நேர்மறையான விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன்.

அடுத்த சீசனில் அணிக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அதிகமாக கற்றுள்ளேன்.

இந்தமுறை நான் தவறு செய்த இடங்களை எல்லாம் திருத்திக்கொண்டு இன்னும் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.

இந்த சீசனில் விளையாடியதை விட 2 மடங்கு கூடுதலாக அடுத்த சீசனில் விளையாடுவேன். அந்த அளவுக்கு கற்றுள்ளேன்.

எனது அணி அடுத்த முறை இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும். அதில் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பங்களிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை: ஆா்பிஐ அறிவிப்பு

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

ஜீவாவின் புதிய படப்பெயர்!

முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை கண்டனம்

SCROLL FOR NEXT