கிரிக்கெட் பந்து படம்: ஏஎன்ஐ
ஐபிஎல்

கிரிக்கெட் பந்தின் மீது உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதித்தது நல்லதா? வில்லியம்சன் குழப்பம்!

கிரிக்கெட் பந்தின்மீது உமிழ்நீரைப் பயன்படுத்த பிசிசிஐ அனுமதித்தது குறித்து...

DIN

கிரிக்கெட் பந்தின் மீது உமிழ்நீரைப் பயன்படுத்த பிசிசிஐ அனுமதித்தது குறித்து வில்லியம்சன் பேசியுள்ளார்.

ஏன் உமிழ்நீரைப் பயன்படுத்துகிறார்கள்?

கிரிக்கெட் பந்தில் ஷைன் (பளபளப்பான), ரஃப் (சொறசொறப்பான) என இரண்டு பக்கங்கள் உள்ளன. இதில் பளபளப்பான பக்கத்தில் உமிழ்நீரைப் பயன்படுத்தினால் பந்து ஸ்விங் ஆகும் (திரும்பும்) என்பது கவனிக்கத்தக்கது.

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2022 -ஆம் ஆண்டு கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்குவதற்காக உமிழ்நீர் பயன்படுத்துவதை நிரந்தரமாக தடைசெய்வதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது.

தடை நீக்கம்

இதற்கு முதலில் எதிர்ப்புகள் எழுந்தாலும் பின்னர் நடைமுறையாக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதனை பிசிசிஐ அனுமதித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் விளையாடும் மைதானங்கள் பவுண்டரி எல்லைகள் சிறியதாக இருப்பதால் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கிறது.

தற்போது, இந்தத் தடை நீக்கத்தினால் பந்து ஸ்விங் ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு சிறிது சாதகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தடைநீக்கம் உதவுகிறதா?

இந்நிலையில் இது குறித்து கேன் வில்லியம்சன் கூறியதாவது:

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அந்தப் பந்தினை பளபளப்பாக்குவது கடினமான ஒன்று. சமீபத்தில் ஐபிஎல் தொடரில் உமிழ்நீரை பயன்படுத்த அனுமதி அளித்தது பாதிப்பை ஏற்படுத்துமா எனத் தெரியவில்லை. அதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிறிது உதவினாலும் அது பெரிய விஷயம்தான். உமிழ்நீரைப் பயன்படுத்தி பந்து ஸ்விங் (திரும்பினால்) ஆனால் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு நன்மை உண்டாகும்.

கடுமையான இந்தப் போட்டியில் உமிழ்நீர் சிறிது உதவினாலும் சிறந்ததாகத்தான் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குன்றத்தூர் இரட்டைக் கொலை: 3 பேருக்கு தலா இரு ஆயுள் தண்டனை!

ரஜினிகாந்த் வெளியிடும்..! டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் நாயகனாகும் படத்தின் டைட்டில் டீசர்!

அந்திப்பூ... தன்யா சர்மா!

தாவணிக் கனவுகள்... வேத்விகா சோனி!

பாகிஸ்தானில் 23 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT