முகப்பு
ஐபிஎல்

முதல் போட்டி தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை: கேகேஆர் பயிற்சியாளர்

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Updated On : 25 மார்ச், 2025 at 2:25 PM
பகிர்:

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையில் தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

அதிகம் கவலைப்படவில்லை

நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை என அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு அணியாக முதல் போட்டியில் ஏற்டட்ட தோல்வி குறித்து நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. முதல் போட்டியில் வெல்வது என்பது எப்போதும் சிறப்பான விஷயம். முதல் போட்டியில் வெற்றி பெற்றால் நேர்மறையான தொடக்கமாக இருந்திருக்கும். ஆனால், முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து நாங்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டோம் என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நாளை (மார்ச் 26) ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →