எம்.எஸ். தோனியுடன் ஷேன் வாட்சன்.  படம்: வாட்சன் | பேஸ்புக்
ஐபிஎல்

சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை: ஷேன் வாட்சன்

முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி குறித்து பேசியதாவது...

DIN

முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை. அதனால் ஆர்சிபிக்கு புதிய சவால் காத்திருக்கிறது எனக் கூறியுள்ளார்.

18-ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச்.22-இல் தொடங்கியது. இதில் ஆர்சிபி தனது முதல் போட்டியில் கேகேஆர் அணியை வென்றது.

சிஎஸ்கே அணி மும்பையை கடைசி ஓவரில் வென்றது. அடுத்ததாக சிஎஸ்கே, ஆர்சிபி அணி வரும் மார்ச்.28ஆம் தேதி மோதவிருக்கிறது.

சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை

இந்நிலையில் ஷேன் வாட்சன் ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் கூறியதாவது:

சேப்பாக்கிற்கு வரும் ஆர்சிபி அணிக்கு புதிய சவால் காத்திருக்கிறது. குறிப்பாக சிஎஸ்கேவிடம் இருக்கும் தரமான சுழல்பந்துவீச்சாளர்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

சிஎஸ்கே அணியின் பலத்தை எதிர்க்க வேண்டுமென்றால் ஆர்சிபி அணியின் வீரர்களை சேப்பாகிற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும்.

ஆனால், சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை என்பதை மறக்கக்கூடாது.

சிஎஸ்கேவின் சுழல்பந்து வீச்சாளர்கள் சவாலானவர்கள்

சிஎஸ்கேவின் ஒட்டுமொத்த அணியும் சேப்பாக்கம் பிட்ச்சிற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதல் போட்டியில் அஸ்வின், ஜடேஜா, நூர் அஹமது என சுழல்பந்துவீச்சாளர்களின் போட்டியை பார்த்தீர்கள்தானே.

இந்த பிட்ச்சில் அவர்கள் மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள். நூர் அஹமது முதல் போட்டியில் எற்படுத்திய தாக்கம் சிஎஸ்கே அணியின் தன்னம்பிக்கையை உயர்த்தியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT