ஷ்ரேயாஸ் ஐயர் படம்: ஏபி
ஐபிஎல்

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம்..! இந்த சீசனில் முதல்முறை!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெதுவாக பந்துவீசியதால் ரூ.12 லட்சம் அபராதம் ஸ்ரேயாஷ் ஐயருக்கு விதிக்கப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேப்பாக்கில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் 19.4ஆவது ஓவரில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே 190க்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதாலும் சஹாலை 19ஆவது ஓவரில் கொடுத்ததும் திருப்பு முனையாக அமைந்தது. இதனால், இறுதியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

பஞ்சாப் அணிக்கு இது முதல்முறை என்பதால் ஐபிஎல் விதி 2.22இன் படி ரூ.12 லட்சம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தமுறை கேகேஆர் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் அணிக்கும் கோப்பையை வென்று தருவார் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் விதைத்துள்ளார்.

புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி 2-ஆவது இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT