சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 179 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் 57-ஆவது போட்டியில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் கொல்கத்தாவின் ஈடர்ன் கார்டன்ஸ் திடலில் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற கேகேஆர் பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 48 ரன்களும் ஆண்ட்ரே ரஸ்ஸல் 21 பந்துகளில் 38 ரன்களும் எடுத்தார்கள்.
சிஎஸ்கே சார்பில் நூர் அகமது சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கடந்த 2018க்குப் பிறகு 180-க்கு அதிகமாக சேஸிங் செய்வதில் சிஎஸ்கே அணிக்கு பிரச்னை இருந்துவருகிறது.
ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.
கொல்கத்தா ஸ்கோர் கார்டு
ரஹ்மானுல்லா குர்பாஸ் - 11
சுனில் நரைன் - 26
அஜிங்க்யா ரஹானே - 48
அங்கிரிஷ் ரகுவன்ஷி - 1
மணீஷ் பாண்டே - 36*
ஆண்ட்ரே ரஸ்ஸல்- 38
ரின்கு சிங்- 9
ரமன்தீப் சிங் - 4*
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.