டெவால்டு பிரீவிஸ் பகிர்ந்த புகைப்படங்கள்.  படங்கள்: இன்ஸ்டா / டெவால்டு பிரீவிஸ்
ஐபிஎல்

வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகள்..! நெகிழ்ந்த சிஎஸ்கே வீரர்!

சிஎஸ்கே வீரர் டெவால்டு ப்ரீவிஸ் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

DIN

சிஎஸ்கே வீரர் டெவால்டு ப்ரீவிஸ் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான டெவால்டு ப்ரீவிஸ் மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைந்தார்.

சிறப்பாக விளையாடி சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் பிரச்னையை தீர்த்துள்ளார். ரசிகர்களிடம் மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளார்.

டெவால்டு ப்ரீவிஸ் களத்துக்கு வரும்போது 125 டெசிபலில் சிஎஸ்கே ரசிகர்கள் சப்தமிட்டது குறிப்பிடத்தக்கது.

நடப்பு சீசனில் 4 போட்டிகளில் 163.64 ஸ்டிரைக் ரேட்டில் 126 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் இந்தியா-பாகிஸ்தான் போரினால் ஒரு வாரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டு வீரர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியதாவது:

சென்னை அணி, பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், அற்புதமான சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி.

சேப்பாக்கம் திடல் மிகவும் கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது.

இந்தியா முழுவதும் கிடைத்த ஆதரவுக்கு நன்றி. இந்தமுறை இந்தியாவில் நான் இருந்த நேரம் இதயத்துக்கு நெருக்கமானது. சென்னையில் ஏற்பட்ட அனுபவம் காலத்துக்கும் மறக்காது. விரைவில் சந்திப்போம் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

9 மாநிலங்களுக்கு ரூ. 4,645.60 கோடி புனரமைப்புத் திட்ட நிதி - உயர்மட்டக் குழு ஒப்புதல்

SCROLL FOR NEXT