ஐபிஎல் போஸ்டர்.  
ஐபிஎல்

தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்யலாம்..! புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

இந்தியாவுக்கு வரமுடியாத வெளிநாட்டு வீரர்களுக்காக தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்வது குறித்து...

DIN

இந்தியாவுக்கு வரமுடியாத வெளிநாட்டு வீரர்களுக்காக தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்ய ஐபிஎல் நிர்வாகம் புதிய விதியை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. நிறுத்தப்பட்ட போட்டிகள் வரும் மே.17ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

தெ.ஆ., ஆஸி., இங்கிலாந்து வீரர்கள் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் வேளையில் அவரவர் தேசிய அணிகளுக்கான போட்டிகள் இருப்பதால் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனம் ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ நிர்வாகம் அளித்ததாகக் கூறும் ஈமெயிலில் கூறப்பட்டவை:

வெளிநாட்டு வீரர்களின் காயம், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வரமாலிருப்பதால் அவர்களுக்கான மாற்று வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்யலாம். ஆனால், இந்த மாற்றங்கள் இந்த சீசனோடு முடிவுக்கு வரும்.

அடுத்தாண்டு தக்கவைப்பு பட்டியலில் தற்போது எடுக்கப்படும் வீரர்களை சேர்க்கமுடியாது.

தற்காலிக மாற்றுவீரர்கள் ஐபிஎல் 2026 ஏலத்தில் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT