தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஜேக் பிரேசர் மெக்கருக்குப் பதிலாக முஸ்தபிசூர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டதாக நேற்று (மே.14) அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்வதாகப் பதிவிட்டுள்ளார்.
இதனால் தில்லி கேபிடல்ஸ் அணியினரும் அந்த அணியின் ரசிகர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாட முஸ்தஃபிசூர் ரஹ்மானுக்கு என்ஓசி (தடையில்லா சான்று) வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பிசிபி சிஇஒ நிஜாமுதீன் சௌதரி,” ஏற்கனவே தேசிய அணிக்கு அவருக்கு வேலை ஒதுக்கப்பட்டது. ஐபிஎல் போட்டியில் அவர் தேர்வானது எங்களுக்குத் தெரியாது. ஐபிஎல் நிர்வாகம், முஸ்தஃபிசூர் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை” எனக் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச அணி மே.17, மே.19ஆம் தேதி 2 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. தில்லி அணிக்கு மே.18ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸுடன் ஐபிஎல் போட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆஸி. வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
29 வயதாகும் வங்கதேச இடதுகை வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் டி20 போட்டிகளில் 351 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
பாகிஸ்தானுடனான மோதலினால் ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன. தற்போது, ஐபிஎல் போட்டிகள் மீண்டும் மே.17ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
2016-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான முஸ்தபிசூர் ரஹ்மான் கடந்த சீசன்களில் தில்லி அணிக்காக 2022, 2023இல் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 38 போட்டிகளில் 38 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பந்துவீச்சில் எகானமி 7.84ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.