ரிஷப் பந்த் படம் | ஐபிஎல்
ஐபிஎல்

லக்னௌ பேட்டிங்; பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்குமா?

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, லக்னௌ முதலில் பேட் செய்கிறது.

தனிப்பட்ட காரணங்களினால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஜெயதேவ் உனத்கட் இடம்பெறவில்லை. ஹர்ஷ் துபே மற்றும் டைடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

லக்னௌ அணியில் வில்லியம் ஓ’ரூர்க் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, இன்றையப் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: ஷேக் ஹசீனா குற்றவாளி எனத் தீர்ப்பு!

தென்னிந்திய மொழிகளில் ரீமேக்காகும் அய்யனார் துணை சீரியல்! குவியும் வாழ்த்து!

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் ஸ்டாலின்

தில்லி கார் வெடிப்பு: அமீர் அலிக்கு 10 நாள் என்ஐஏ காவல்!

பாரீஸ் ஒளிக் கதிர்... தியா மேனன்!

SCROLL FOR NEXT