ஜிதேஷ் சர்மா, தினேஷ் கார்த்திக். படம்: எக்ஸ் / ஆர்சிபி
ஐபிஎல்

எனது குரு தினேஷ் கார்த்திக் அண்ணா... நெகிழ்ச்சியாகப் பேசிய ஜிதேஷ் சர்மா!

ஆட்ட நாயகன் விருது வென்ற ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மா பேசியதாவது...

DIN

ஆட்ட நாயகன் விருது வென்ற ஆர்சிபி வீரர் அந்த அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து பேசியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார். கடந்தாண்டு ஓய்வுபெற்ற தினேஷ் கார்த்திக் தற்போது பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

ஜிதேஷ் சர்மாவை உருவாக்கியதில் தினேஷ் கார்த்திக்கு மிகப்பெரிய பங்குண்டு. ஏற்கனவே ஜியோ ஹாட்ஸ்டார் சிறப்பு நிகழ்ச்சியில் இது குறித்து ஜிதேஷ் சர்மா பேசியுள்ளார்.

நேற்றிரவு லக்னௌவில் நடைபெற்ற போட்டியில் 33 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதுவென்ற ஜிதேஷ் சர்மா பேசியதாவது:

என்னால் எனது எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ள முடியவில்லை. இப்படி ஆடுவேன் என நான் நினைக்கவில்லை. விராட் கோலி ஆட்டமிழந்ததும் நான் ஆட்டத்தைக் கடைசிவரை எடுத்துச்செல்ல நினைத்தேன்.

எனது ஆலோசகர் எனது குரு தினேஷ் கார்த்திக் அண்ணா ‘ஆட்டத்தைக் கடைசிவரை கொண்டுசெல். எந்தச் சூழ்நிலையில் இருந்தும் உன்னால் வெற்றியைப் பெற்றுத்தர முடியும் அளவுக்கு திறமை இருப்பதாக’ எப்போதும் சொல்லுவார்.

எனக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது. ஏனெனில் எனக்கு அனைத்து பாரங்களும் என் மீது விழுந்தது. எனக்கு விராட், க்ருணால், புவனேஷ்வர் இருக்கிறார்கள். அவர்களுடன் விளையாடியது மகிழ்ச்சியாக உணர்கிறேன். கணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க நினைக்கிறேன். இந்தச் சிறப்பான தருணத்தை அடுத்த போட்டிக்கும் கொண்டுச் செல்ல விரும்புகிறேன்.

ரஜத்தின் சாதனையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் இருந்தது. அவருக்குதான் எல்லா புகழும். எங்கள் அணியில் பல ஆட்ட நாயகர்கள் இருக்கிறார்கள். ஹேசில்வுட் பிளே ஆஃப்ஸில் விளையாடுவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT