குவாலிஃபையர் 1: ஆர்சிபி பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ஜோஸ் ஹேசில்வுட்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று நடைபெறும் குவாலிஃபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட் செய்கிறது.
Advertisement
Advertisement
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேயிங் லெவனில் நுவான் துஷாராவுக்குப் பதிலாக ஜோஸ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸில் மார்கோ யான்செனுக்குப் பதிலாக அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.