ஐபிஎல்-2019

ஐபிஎல்: பேட்ஸ்மேன்களைத் திணறடித்த பந்துவீச்சாளர்களில் ஜடேஜாவுக்கு முதலிடம்!

எழில்

ஐபிஎல் போட்டியில் சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால் பந்துவீச்சாளர்கள் சிலரிடம் இது அவ்வளவு சுலபமல்ல. நீங்கள் மெனக்கெட்டால், அதிகப் பந்துகளை எதிர்கொண்டால் மட்டுமே சாத்தியம். 

ஒரு பவுண்டரி கொடுப்பதற்கு அதிகப் பந்துகளை வீசிய பந்துவீச்சாளர்களில் சிஎஸ்கேவின் ஜடேஜாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

இதுவரை 14 ஓவர்கள் வீசிய ஜடேஜா 13 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 6.28. இவருடைய பந்துவீச்சில் சிக்ஸரோ பவுண்டரியோ அடிக்க பேட்ஸ்மேன்களுக்கு 10.5 பந்துகள் தேவைப்பட்டுள்ளன. 

இதற்கு அடுத்த இடத்தில் உள்ளவர் தில்லி அணியின் மிஸ்ரா. 10 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 6.91. இவருடைய பந்துவீச்சில் சிக்ஸரோ பவுண்டரியோ அடிக்க பேட்ஸ்மேன்களுக்கு 9.80 பந்துகள் தேவைப்பட்டுள்ளன. 

ஒரு பவுண்டரி கொடுக்க அதிகப் பந்துகளை வீசிய பந்துவீச்சாளர்கள்

ஜடேஜா (சிஎஸ்கே) - 10.5 பந்துகள்
அமித் மிஸ்ரா (தில்லி) - 9.80 பந்துகள்
ஆர். அஸ்வின் (பஞ்சாப்) - 9.4 பந்துகள்
சாண்ட்னர் (சிஎஸ்கே) - 9.3 பந்துகள்
கிருனாள் பாண்டியா (மும்பை) - 8.8 பந்துகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT