டோக்யோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இன்று நடந்த காலியிறுதியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் ஆர்ஜென்டினாவுடன் இந்திய மகளிர் அணி மோதுகிறது. இந்திய மகளிர் ஹாக்கி அணி முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.