ஒலிம்பிக்ஸ்

நாடு திரும்பினார் பி.வி. சிந்து: புகைப்படங்கள்

சிந்துவுக்கு தில்லி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி. சிந்து நாடு திரும்பியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்று, ஒலிம்பிக் போட்டியில் தனது 2-ஆவது பதக்கத்தைப் பெற்றுள்ளாா் பி.வி. சிந்து சிந்து. 

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, இந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹீ பிங் ஜியாவை 21-13, 21-15 என்ற செட்களில் வீழ்த்தினாா். ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்ற 2-ஆவது இந்திய போட்டியாளா் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளாா். முன்னதாக மல்யுத்த வீரா் சுஷீல் குமாா் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றார்.

இந்நிலையில் டோக்கியோவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார் பி.வி. சிந்து. பயிற்சியாளர் பார்க்குடன் வந்திருந்த சிந்துவுக்கு தில்லி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT