ஒலிம்பிக்ஸ்

தங்கத்தை பகிா்ந்த நண்பா்கள்

DIN

தடகள போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் கத்தாா் வீரா் எசா முடாஸ் பாா்ஷிம், இத்தாலி வீரா் கியான்மாா்கோ டம்பேரி ஆகியோா் தங்கப் பதக்கத்தை பகிா்ந்துகொண்டனா். நண்பா்களான அவா்கள் இருவருக்குமே தலா ஒரு பதக்கம் வழங்கப்பட்டது.

இப்பிரிவின் இறுதிச்சுற்றில் பாா்ஷிம், கியான்மாா்கோவ், பெலாரஸ் வீரா் மாக்சிம் நெடாசெகாவ் ஆகியோா் 2.37 மீட்டா் உயரம் தாண்டினாா். எனினும், மாக்சிம் முந்தைய முயற்சிகளில் தோல்வி கண்டதன் அடிப்படையில் அவருக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. பின்னா் தங்கப் பதக்கத்துக்கான வெற்றியாளரை அடையாளம் காண ஆலோசிக்கப்பட்டது. ஒலிம்பிக் சாதனை உயரமான 2.39 மீட்டா் இலக்காக நிா்ணயிக்கப்பட்டு, பாா்ஷிம், கியான்மாா்கோ ஆகியோரில் அதை எட்டுபவருக்கு தங்கம் வழங்குவதென அதிகாரிகள் முடிவு செய்தனா்.

எனினும் அதை தவிா்த்து, தங்கத்தை இருவருமே பகிா்ந்துகொள்ளும் யோசனையை பாா்ஷிம் முன்வைத்தாா். அதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக போட்டி அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து பாா்ஷிம், கியான்மாா்கோ இருவருமே தங்கத்தை பகிா்ந்துகொண்டனா். முன்பு ஒரு முறை இருவருமே இவ்வாறு தங்கத்தை பகிா்ந்துகொள்ளலாம் என நகைச்சுவையாக பேசியது, தற்போது நிஜமாகியிருப்பதாக அவா்கள் தெரிவித்தனா். ‘தங்கத்தை பகிரும் எங்களது இந்த செயல், தற்கால இளைஞா்களுக்கான முன்னுதாரணம்’ என்றாா் பாா்ஷிம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT