ஒலிம்பிக்ஸ்

2-ஆவது டி20: வங்கதேசம் வெற்றி

DIN

டாக்கா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது அந்த அணி.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 18.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் அஃபிஃப் ஹுசைன் ஆட்டநாயகன் ஆனாா்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக மிட்செல் மாா்ஷ் 5 பவுண்டரிகள் உள்பட 45 ரன்கள் விளாசினாா். வங்கதேச பௌலா்களில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். பின்னா் வங்கதேச இன்னிங்ஸில் அதிகபட்சமாக அஃபிஃப் ஹுசைன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 37 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்டன் அகா் 17 ரன்களே கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT