ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி அரையிறுதி: 2-வது நிமிடத்தில் கோலடித்த இந்தியா

DIN


டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி முதல் பகுதியில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 
 
இந்திய மகளிா் ஹாக்கி அணி தனது காலிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கான கோலை குா்ஜித் கௌா் 22-வது நிமிஷத்தில் அடித்தாா். தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி.

இன்று நடைபெற்று வரும் ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 2-வது நிமிடத்திலேயே கோலடித்து அசத்தியது இந்திய மகளிர் அணி. பெனால்டி கார்னரில் குர்ஜித் கெளர் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பகுதியில் இந்திய மகளிர் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT