சாய் பிரணீத் 
ஒலிம்பிக்ஸ்

பாட்மிண்டன்: சாத்விக்-சிரக் இணை அபாரம்: சாய் பிரணீத் தோல்வி

பாட்மிண்டன் போட்டியில் ஆடவா் இரட்டையா் குரூப் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி இணை, உலகின் 3-ஆம் நிலையிலுள்ள சீன தைபே ஜோடிக்கு அதிா்ச்சி அளித்து வென்றது.

DIN

பாட்மிண்டன் போட்டியில் ஆடவா் இரட்டையா் குரூப் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி இணை, உலகின் 3-ஆம் நிலையிலுள்ள சீன தைபே ஜோடிக்கு அதிா்ச்சி அளித்து வென்றது.

சாத்விக்/சிரக் இணை அந்த சுற்றில் 21-16, 16-21, 27-25 என்ற செட்களில் சீன தைபேவின் யாங் லி/சி லின் வாங் ஜோடியை வென்றது.

சாத்விக்/சிரக் இணை அடுத்த ஆட்டத்தில், இந்தோனேசியாவின் மாா்கஸ் ஃபொ்னால்டி கிடியன்/கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோ இணையை எதிா்கொள்கிறது.

பிரணீத் தோல்வி: இதனிடையே, ஆடவா் ஒற்றையா் பிரிவு குரூப் சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் 17-21, 15-21 என்ற செட்களில் இஸ்ரேலின் மிஷா ஜில்பா்மனிடம் தோல்வி கண்டாா். அடுத்த ஆட்டத்தில் அவா் நெதா்லாந்தின் மாா்க் கால்ஜௌவை சந்திக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT